தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் : கட்டுநாயக்காவில் கைது!
40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1.163 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் அவரின் உடமைகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.





