உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம்!
உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir 2025 ஆம் ஆண்டுக்கான உலகக் காற்றுத் தர பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளதுடன், பங்களாதேஷ் மற்றும் தஜிகிஸ்தான் இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
வாகனப் புகை, கட்டுமானப் புழுதி, தொழிற்சாலைக் கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரித்தல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
உலகளாவிய ரீதியிலான 143 நாடுகளில் வெறும் 13 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத்தர வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




