இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்த உலக உணவுப் பொருட்களின் விலை!
உலக உணவுப் பொருட்களின் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் விலைக் குறியீடு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் விலைக் குறியீட்டின்படி, காய்கறி எண்ணெய்கள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் சரிவினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கண்காணிக்கும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) விலைக் குறியீடு, முந்தைய மாதத்தில் 127.7 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த மே மாதத்தில் 124.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)





