இலங்கை

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன்!

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் முதலிடம் பெற்றுள்ளார்.

2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது.

அதனடிப்படையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அவர்கள் அடம்பன் வண்ணாகுளத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.

பாடசாலையில் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் பண்புள்ள மாணவனாக கல்வி கற்று பாடசாலைக்கும் மடு கல்வி வலயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

மேலும் அவரது உயர்வுக்கு பெற்றோர்களின் ஊக்கப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!