இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு தொடர்பான 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதுளை, காலி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
(Visited 31 times, 1 visits today)