விஜய் போல சைக்கிளில் வந்த விஷால்.. கூடவே வந்த புது பஞ்சாயத்து
நடிகர் விஷால் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக முத்தையாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் செய்த செயல் ஒன்று புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
விஷால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். இன்று சென்னையில் நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக விஷால் தனது சைக்கிளில் வந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் ஒரு அரசு பேருந்தும் வந்தது. சில நொடிகள் அந்தப் பேருந்துக்கு அவர் வழிவிடாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அதேசமயம் அவர் வேண்டுமென்றே பேருந்துக்கு வழிவிடாமல் இல்லை. ஓட்டுநர் ஹாரன் அடித்ததும் வழி விடுகிறார். தேவையில்லாமல் விஷால் மீது பழி சுமத்துகிறார்கள் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.