பொழுதுபோக்கு

விஜய்யின் கடைசி படத்தில் விஜய்க்கு 3 ஹீரோயின்களா? அதுவும் இவங்களா?

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் 3 விஜய்யை காட்டி வெங்கட் பிரபு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்திருந்தார். கடந்த வாரம் வியாழனன்று வெளியான அந்த படம் முதல் 4 நாட்கள் அசுர வேட்டை நடத்தியது.

செப்டம்பர் 14ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ள நிலையில், தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து 3 முன்னணி நடிகைகள் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு எல்லாம் வரிசையாக மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுப்பது போல கொடுத்து வருகிறார். த்ரிஷா, சினேகாவை தொடர்ந்து தளபதி 69 படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பா, மகன் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பாரா? விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பாரா என்பது எல்லாம் இப்போதைக்கு தெரியவில்லை.

விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சல் என 3 முறை இணைந்து நடித்த நடிகை சமந்தா லியோ படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டியது ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் தான் அந்த படத்தில் த்ரிஷாவை லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகின.

உடல் ஆரோக்கியத்துடன் தற்போது மீண்டும் வந்துள்ள நடிகை சமந்தா நிச்சயம் தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

3வது ஹீரோயினாக பிரேமலு பட ஹீரோயின் மமிதா பைஜுவும் தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. விஜய்யின் தீவிர ரசிகையான அவர் சூர்யாவின் வணங்கான் படத்திலேயே நடிக்க வேண்டியது. ஆனால், சூர்யா வெளியேறியதும் மமிதா பைஜுவும் வெளியேறிவிட்டார். ஜி.வி. பிரகாஷின் ரெபல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மமிதா பைஜு கண்டிப்பாக தளபதி 69 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச். வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் தான் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலை வெளியாகவுள்ள அறிவிப்பில் அதிகாரப்பூர்வமாக இதையெல்லாம் அறிவிப்பார்களா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!