விஜய் சேதுபதிக்கு ஏழரை சனி புடிச்சிருக்கு; சினிமாவை விட்டு விலகல்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் நடிப்பில் பிசியாகி உள்ள அவர் தற்போது ஏஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதுதவிர அவர் கைவசம் ட்ரெயின் என்கிற திரைப்படமும் உள்ளது. இப்படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி…
தனக்கு ஏழரை சனி இருப்பதாகவும், அதனால் தன்னை சினிமாவை விட்டு வெளிநாட்டுக்கே போக சொன்னார்கள் என்றும் பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது : “உங்களுக்கு ஏழரை சனி புடிச்சிருக்கு, நீங்க இன்னும் 10 வருஷம் கழிச்சு தான் சினிமாவில் கொடிகட்டி பறக்க முடியும். அதனால திரும்ப வெளிநாட்டுக்கே வேலைக்கு போயிடுங்கனு சொன்னாங்க. அதற்கு நான், ஏழரை சனி புடிச்சா ரொம்ப நல்லதுனு சொன்னேன்.
ஏன்னா, அவர் கெடுதல் பண்ணல, நம்மள கத்துக்க சொல்றாரு அப்படின்னு தான் நான் எடுத்துப்பேன். ஒருவேளை பத்து வருஷம் வெளிநாடுக்கு போய்ட்டு, திரும்ப வந்தா.. என்னை சினிமாவுல உச்சத்துல தூக்கி உட்கார வச்சிருவாங்களா.
எனக்கு வேலை தெரியணும்ல. நான் பாட்டுக்குய் போயிட்டா வேலையை எவன் எனக்கு கத்துக் கொடுப்பான். இங்க இருந்தா தான் நான் கத்துக்க முடியும். அதனால ஏழரை சனி பிடிக்கிறது ரொம்ப நல்லது. நான் சினிமாவுக்கு கஷ்டப்பட்டு வரல, கத்துக்கிட்டு வந்தேன்” என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.
அவரின் இந்த விளக்கத்தை கேட்ட ரசிகர்கள், இந்த தெளிவு இருந்தாலும் எந்த துறையிலும் சாதித்துவிடலாம் என கூறி வருவதோடு, விஜய் சேதுபதியையும் பாராட்டி வருகின்றனர்.