விடாமுயற்சி படக்குழு தலையில் விழுந்த இடி… இனி நடக்கப்போவது என்ன?
ஜித் மார் திரைப்படம் இன்று வெளியான நிலையில், சில மணி நேரங்களில் சில அங்கீகரிக்கப்படாத இணையதளங்களில் திருட்டு தனமாக வெளியாகி உள்ளது.
இதனால், இணைய பயனர்கள் தங்கள் தொலைபேநடித்த விடாமுயற்சிசிகள் அல்லது கணினிகளில் படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்க்க வாய்ப்புள்ளதால் இப்படத்தின் வசூல் குறையும் அபாயமும் ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் ‘விடாமுயற்சி’ படத்தின் HD, 1080p, 720p மற்றும் 480p போன்ற பல்வேறு தரங்களிலும் இப்படம் பார்க்கக் கிடைக்கிறது. திரையரங்குகளில் இன்று வெளியான போதிலும், விடாமுயற்சி வெளியான உடனேயே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி உள்ளது ஒட்டு மொத்த படக்குழுவின் தலையில் இடியை இறக்கி உள்ளது.
திரைப்படங்கள் இப்படி ஆன்லைனில் கசிவது புதிதல்ல. விடாமுயற்சிக்கு முன்பு, கேம் சேஞ்சர், புஷ்பா 2, பொன்மான், பிரவீன் கூடு ஷாப்பு, தாக்கு மகாராஜ், பார்ரோஸ், சங்கராந்திக்கு வஸ்துனம் போன்ற படங்களும், இந்த ஆண்டு வெளியான படங்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
ஏற்கனவே திரைப்பட விமர்சகர்களின் எதிர்மறை விமர்சனங்கள் தான் படத்தின் வசூலை பாதிக்கிறது என, தயாரிப்பாளர்கள் தங்களின் கவலையை கூறி வந்த நிலையில், சில பாசிட்டிவ் விமர்சனங்களை பெரும் படங்கள், இப்படி ஆன்லைனில் லீக் ஆவது மூலம் வசூலில் சரிவை சந்திக்க நேர்கிறது.
அதே நேரம், தரமான படங்கள் என்றுமே திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சோடை போவது இல்லை என்பதையும் சில படங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான, அமரன் இந்த ஆண்டு வெளியான மதகஜராஜா போன்ற படங்கள், ஆன்லைனில் திருட்டு தனமாக வெளியானபோதும் வசூலில் சாதனை படைத்தது குறிபிடத்தக்கது.
விடாமுயற்சி திரைப்படமும் வெளியானதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இப்படத்தின் வசூலை ஆன்லைன் பதிவு பாதிக்காது என்கிற நம்பிக்கை இருப்பதாக திரைப்பட உரிமையாளர்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.