நயனுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்… செம்ம அப்செட்டில் நயன்

விக்னேஷ் சிவன் தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா தனது சொந்த தயாரிப்பின் மூலம் விக்னேஷ் சிவன் படத்தை இயக்க சம்மதித்தார்.
அதன்படி பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை எடுத்து வருகிறார்.
இப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி விக்னேஷ் சிவன் பிறந்த நாளன்று வெளியாக இருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது.
ஆனால் இப்போது படத்தின் வேலைகள் இன்னும் முடியாமல் இருக்கிறதாம். சில காட்சிகள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறது.
அதோடு பின்னணி வேலைகளும் இருக்கிறதாம். அதனால் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் அன்று இந்த படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆகையால் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றனர்.
இந்த படம் தாமதத்தால் இப்போது நயன்தாரா செம அப்சட்டில் இருக்கிறாராம். விக்னேஷ் சிவன் மீதும் கோபத்தில் இருக்கிறார். ஏனென்றால் செப்டம்பர் 18 வேறு படங்களின் போட்டியில்லாமல் தனியாக இந்த படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.
ஆனால் பிப்ரவரி 14ஆம் தேதி கண்டிப்பாக போட்டி போட நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. மேலும் சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியாததும் ஒரு பினடைவை சந்தித்திருக்கிறது. ஆகையால் இந்த படம் கல்லா கட்டுமா என்ற பதட்டத்தில் இருக்கிறார் நயன்தாரா.