வெற்றி வசந்த் – வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டார் வெற்றி வசந்த்.
இவரை சின்னத்திரை விஜய் சேதுபதி என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

சீரியல் நடிப்பதை தாண்டி பாடல்கள், தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, ஷோர்ட் பிலிம் என பல துறைகளிலும் சாதித்துவருகின்றார்.
இவர் பிரபல சீரியல் நடிகை வைஷாலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இந்த புதிய ஜோடியின் வீட்டில் ஒரு இறப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது வைஷாலியின் அப்பா இன்று காலை உயிரிழந்துள்ளாராம்.
இந்த தகவலை வைஷாலி தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.






