வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் – 40 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு!
வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உட்பட குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, 150 க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் மற்றும் உயரடுக்கு தரைப்படைகள் வெனிசுலாவில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அரசாங்க அதிகாரி, இந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை உலகெங்கிலும் உள்ள நாடுகள் கண்டித்துள்ளன, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் கொலம்பியா ஆகியவை மதுரோவை உடனடியாக விடுவிக்கக் கோரியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த நடவடிக்கை ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது என்றும் சர்வதேச சட்டத்தை மீறியிருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





