அமெரிக்க மக்களுக்கு அவசர அறிவிப்பு – மீளக் கோரப்படும் குடிநீர் போத்தல்கள்!
அமெரிக்காவில் ஏறக்குறைய 40000 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் திரும்பப்பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), அக்டோபர் 4, 2026 திகதியிடப்பட்ட 39‑222 #3 என்ற லாட் குறியீட்டை கொண்ட போத்தல்களை மீளக் கோருவதாக அறிவித்துள்ளது.
குறித்த போத்தல்களில் மிதக்கும் கருப்பு நிற வெளிநாட்டுப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பப் பெறப்பட்ட தண்ணீர் போத்தல்கள் இல்லினாய்ஸ் (Illinois), இந்தியானா (Indiana), கென்டக்கி (Kentucky), மிச்சிகன் (Michigan), ஓஹியோ (Ohio) மற்றும் விஸ்கான்சினில் (Wisconsin) உள்ள கடைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த நீரை அருந்தியதால் ஏற்பட்டதாக எந்தவொரு நோயும் பதிவாகவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி மீளப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





