ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸை தாக்கிய புவலாய் புயல் – 20 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்கி வருகின்றது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் நீரால் சூழப்பட்டு உள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளன. 1,400 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த கொடூர புவலாய் புயல் தாக்கத்தால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புவலாய் புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ளது. அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

புயலால் மணிக்கு 133 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்து, அதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி