உலகம்

மருந்துகளை மலிவு விலையில் கொள்வனவு செய்யும் TrumpRx திட்டம் நடைமுறைக்கு!

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்யும் TrumpRx என்ற ஆன்லைன் போர்டலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யும் மருந்துகளை அமெரிக்கர்ளுக்கு மலிவான விலையில் வழங்குவதே இதன் நோக்கம் என அவர் அறிவித்துள்ளார்.

உதாரணமாக Ozempic மற்றும் Wegovy போன்ற பிரபலமான GLP-1 எடை இழப்பு மருந்துகளின் விலைகள் 1000 டொலருக்கும் அதிகமாக இருந்த நிலையில், அதனை கணிசமாக குறைக்க இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி முயற்சியானது 14 மருந்து நிறுவனங்களுடன் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!