கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை இரத்து செய்த ட்ரம்ப்!
கனடாவுடனான “அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும்” இரத்து செய்வதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்ற தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றின் காரணமாக அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இந்த விளம்பரம் உண்மைகளை தவறாகக் குறிப்பிட்டதாகவும், அமெரிக்க நீதிமன்ற முடிவுகளை பாதிக்கும் நோக்கில் “மிக மோசமான நடத்தையை” வெளிப்படுத்தியதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு தனது நாட்டின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளை திடீரென முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் முடிவு இரு நாட்டு உறவில் விரிசல்களை கொண்டுவரக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





