விஜய் குறித்து த்ரிஷா துபாயில் கூறிய செய்தி

நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் விஜய் இணைந்து இதுவரை ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடனமாடி இருந்தார்.
அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
நேற்று துபாயில் SIIMA விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் 25 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள நடிகை த்ரிஷாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அப்போது மேடையில் அவர் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர்களை குறித்து த்ரிஷா பேசினார்.
அதில் விஜய் குறித்து அவர் கூறும்போது, “அவருடைய புதிய பயணத்திற்கு குட் லக், அவருக்கு என்ன கனவு இருந்தாலும் அது நிஜத்தில் நடக்கவேண்டும். அதற்கு அவர் தகுதியுடையவர்” என தனது வாழ்த்தை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)