உலகம்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் போரை முடிக்க உதவும் – ட்ரம்ப் நம்பிக்கை!

இந்தியாவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அதேபோல்  அமெரிக்கப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை பூஜ்ஜியமாகக் குறைத்து $500 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி 

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் – வரி குறைப்பை அறிவித்தார் ட்ரம்ப்!

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!