டைம் வந்து விட்டது… எனக்கு 100 கோடிக்கு மேல் வேண்டும்! பிக் பாஸ் புதிய அறிவிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியில் இந்நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 7-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துவிட்டதால், மீண்டும் இந்த ஆண்டு முதல் பழையபடியே ஜூலை மாதத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசனின் சம்பளம் விவரம் தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய கமல், தற்போது 7-வது சீசனை தொகுத்து வழங்க ரூ.130 கோடி சம்பளம் பேசி உள்ளாராம். முதலில் ரூ.100 கோடி சம்பளம் தருவதாக பிக்பாஸ் குழு கேட்டதற்கு முடியவே முடியாது என டீல் பேசி ரூ.130 கோடி சம்பளத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம்.