திருமண செய்தி : திரிஷா வைத்த செக்…
“திரிஷாவுக்கு கல்யாணம்” இது தான் இப்போது எங்கு பார்த்தாலும் பேசுபொருளாக இருக்கின்றது.
ஆனால் இதுக்கு திரிஷா என்ன பதில் கொடுத்து இருக்கார் தெரியுமா?
“என்னுடைய வாழ்க்கையைப் பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் திரிஷா.
தமிழ்த் திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகை வலம் வருபவர் திரிஷா.
பல நடிகைகள் வந்து போனாலும், சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை திரிஷா, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் செய்திகள் உலா வருவது வழக்கம். ஆனால், திரிஷா தரப்பில் இருந்து உறுதியாக எதுவும் இதுவரை கூறப்படவில்லை.
இந்த நிலையில், நடிகை திரிஷாவுக்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பம் முடிவு செய்து, புதிதாக வரன் பார்த்து வருவதாகவும், மணமகன் சண்டீகரைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும், அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்ததக்கது.






