ப்ரோமோஷன் மேடையில் பட்டையை கிளப்பிய சிவகுமார்… மோதப்போகும் 3 படங்கள்

சம்மர் விருந்தாக மூன்று படங்கள் ரிலீஸ் ஆக போகிறது. அந்த மூன்று படங்களுக்கும் பயங்கரமாய் புரொமோஷன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் பட குழுவினர்.
தக் லைப்:
36 வருடங்களுக்கு பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகிய படம் இது. ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இப்பொழுது வெளியானது. அதைத் தொடர்ந்து பட ப்ரொமோஷனலிலும் இவர்கள் பட்டையை கிளப்பி வருகிறார்கள். கமலுடன் சேர்ந்து இதில் சிம்புவும் நடித்திருக்கிறார்.
கேங்கர்ஸ்:
20 வருடங்களுக்குப் பிறகு சுந்தர்சியுடன் கூட்டணி போட்டுள்ளார் வடிவேலு. எப்பொழுதுமே சுந்தர் சி படம் என்றால் தியேட்டரே அதிரும் அளவிற்கு காமெடி இருக்கும். அதிலும் இம்முறை வடிவேலு இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. எந்த சேனலை திரும்பினாலும் வடிவேலும் சுந்தர்சியும் தான் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.
ரெட்ரோ:
மே ஒன்று இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். சிவகுமார் சரவெடி போல் பேசினார். அதில் சூர்யா போல் வேறு எந்த நடிகர் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என அதிரடியாய் பேசி கமல் , சிம்புவின் தக்லைப் பட புரமோஷனுக்கே டஃப் கொடுத்துவிட்டார்.
இந்த சம்மர் விடுமுறையை கொண்டாடும் விதமாக இந்த மூன்று படமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் 25ஆம் தேதி கேங்கர்ஸ் படம் வெளியாக உள்ளது இந்த படத்தில் வடிவேலு பழைய மாதிரி காமெடி பண்ணி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.