விசில் அடித்த ரசிகரிடம் கோபமடைந்த அஜித்
அஜித் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும், நரேன் கார்த்திகேயனுடன் மலேசியாவில் நடைபெறும் பந்தயத்திலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், ரேஸ் பயிற்சியின்போது ரசிகர் ஒருவர் அஜித்தைப் பார்த்து உற்சாகமாகக் குரல் கொடுத்தார். அஜித்தும் சிரித்தபடி கையசைத்ததும், அந்த ரசிகர் விசிலடித்தார்.
அதனைக் கவனித்த அஜித், விசிலடிக்க வேண்டாம் என சைகை மூலம் கண்டித்து, முறைத்துப் பார்த்தபடி சென்றுவிட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 5 times, 1 visits today)





