குட் பேட் அக்லி படத்தில் தெலுங்கு பட நடிகர்?.. லேட்டஸ்ட் தகவல்
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார. அடுத்ததாக அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் படத்தில் ஜெயிலர் பட நடிகர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார்.
இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங்கே முடியாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவின.
அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
குட் பேட் அக்லியில் அஜித் ஏற்கவிருக்கும் கெட்டப் குறித்து சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அதன்படி படத்தில் அவர் மூன்று கெட்டப்புகளில் தோன்றவிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்தப் படம் டைம் ட்ராவல் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகும் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதன்படி இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் கமிட்டாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்து அப்ளாஸை அள்ளியவர் சுனில். அதேபோல் தெலுங்கிலும் புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து ஃபேமஸ் ஆனவர். ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கியிருந்த மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் சுனில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.