செய்தி விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை ஆரம்பம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா – இந்தியா இடையே நடைபெறவுள்ளது.

2021-2023 ஆண்டுகளில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் 09 அணிகள் கலந்து கொண்டு 19 போட்டிகளில் 11 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதலிடத்தையும் இந்தியா 18 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

இதேவேளை, 05 முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான ரிக்கி பொன்டிங், ரவி சாஸ்திரி, வாசிம் அக்ரம், இயன் பெல், ரோஸ் டெய்லர் ஆகியோர் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி தொடர்பில் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இந்த 5 வீரர்களில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் சூப்பர் வீரர் ரிக்கி பாண்டிங், பாகிஸ்தானின் முன்னாள் சூப்பர் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், நியூசிலாந்தின் முன்னாள் சூப்பர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் ஆகியோர் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பை அவுஸ்திரேலியா வெல்லும் என தெரிவித்துள்ளனர்.

எனினும், போட்டியில் முதலில் வரும் அணி அதிக பலன்களைப் பெற முடியும் என இந்தியாவீரரான ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!