அவசர நிலையை எதிர்கொள்ளும் உலகம் : ஐ.நா வெளியிட்ட தகவல்!
BY VD
June 14, 2023
0
Comments
200 Views
சூடான், உக்ரைன் போர் காரணமாக சுமார் 110 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
மோதல்கள், துன்புறுத்தல்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இது குறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் ஐ.நா அகதிகள் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் பிலிப்போ கிராண்டி, கடந்த ஏப்ரலில் இருந்து கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் சூடானில் நடைபெறும் உள்நாட்டு மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும், கூடுதலாக 19 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும், இதில் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
“நாங்கள் தொடர்ந்து அவசரநிலைகளை எதிர்கொள்கிறோம் என்றும் கடந்த ஆண்டு ஏஜென்சி 35 அவசரநிலைகளை பதிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
The number of people #ForcedToFlee has more than doubled in the last decade, now topping 110 million, the highest level since records began.
We must stand #WithRefugees and find urgent solutions to this human tragedy.
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்