மெக்ஸிகோவில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் : களமிறங்கிய இராணுவத்தினர்!
மெக்ஸிகோ 660 வீரர்கள் மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட தேசிய காவலர் அதிகாரிகளை மேற்கு மாநிலமான மைக்கோவாகனுக்கு இந்த மாதம் அனுப்பியுள்ளது.
அங்கு சில சட்டவிரோத குழுக்கள் விவசாயிகளை மிரட்டி பணம் பறிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
துருப்புக்கள் பேக்கிங் ஹவுஸுக்குச் சென்று, பழங்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை அழைத்துச் செல்வதாகவும், அபட்ஸிங்கன், அகுயில்லா மற்றும் பியூனாவிஸ்டா நகரங்களைச் சுற்றியுள்ள முக்கிய உற்பத்திப் பகுதிகளில் உள்ள மொத்த சந்தைகளில் பாதுகாப்பை வழங்குவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்தில், மைக்கோகானுக்கு அனுப்பப்பட்ட துருப்புக்கள் 10 துப்பாக்கிகள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகளை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)