பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பதற்றம்!
பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அங்கு ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட காணொளி ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்தவர்கள் மேசைகளில் அமர்ந்து விருந்து உணவை உட்கொள்வதில் இருந்து காணொளி ஆரம்பமாகின்றது.
சிறிது நேரத்தில் உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்படுகிறது. உடனே ஒருவரையொருவர் தாக்குகிறார்கள். பின்னர் சண்டை தீவிரமாகி ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மோதலை தடுக்க சிலர் முயன்ற நிலையிலும் அது கைகொடுக்கவில்லை. மாறாக மோதல் தீவிரமாவது போன்று காட்சிகள் உள்ளன.
https://twitter.com/gharkekalesh/status/1696531827929059683?s=20
(Visited 10 times, 1 visits today)





