உலகம் முக்கிய செய்திகள்

உலகின் 95 சதவீதமான வளங்கள் 01 சதவீத செல்வந்தர்களின் வசம் – அதிக வரி விதிக்க அழைப்பு!

பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கக் கோரி எழுதப்பட்டுள்ள ஒரு திறந்த கடிதத்தில் ஏறக்குறைய 400  பணக்காரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நடிகர் மார்க் ருஃபாலோ ( Mark Ruffalo) மற்றும் இசைக்கலைஞர் பிரையன் எனோ (Brian Eno) உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

உலகில் 95  சதவீதத்திற்கும் அதிகமான சொத்துக்களை 1 சதவீத பணக்காரர்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்று அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே செல்வந்தர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையில் விரிவடைந்து வரும் ஏற்றத்தாழ்வை குறைக்குமாறு இக்கடிதம் பரிந்துரைத்துள்ளது.

அதிக செல்வம் கொண்ட ஒரு சில உலகளாவிய தன்னலக்குழுக்கள் நமது ஜனநாயகங்களை விலைக்கு வாங்கினர், நமது அரசாங்கங்களைக் கைப்பற்றினர்,  நமது ஊடக சுதந்திரத்தை முடக்கினர்,  தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் மீது பிடியை வைத்தனர்,  வறுமை மற்றும் சமூக விலக்குகளை ஆழப்படுத்தினர், மேலும் நமது கிரகத்தின் சிதைவை துரிதப்படுத்தினர், என்று அவ் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
error: Content is protected !!