“என்னம்மா கண்ணு.. சௌக்கியமா?” சத்யராஜின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?
சத்யராஜின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய செய்தி வெளியாகி உள்ளது.
1954ஆம் ஆண்டு அக்டோபர் 3 கோவையில் சுப்பையா, நாதம்மாள் தம்பதிகளின் மூத்த மகனாக பிறந்தார் சத்யராஜ். இவரது இயற்பெயர் ரங்கராஜ். சிறுவயது முதலே நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், சென்னையில் பட வாய்ப்பு தேடி அலைந்தார்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான சத்யராஜ் முதலில் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். இவரின் மிரட்டலான வில்லத்தனமும், இவரின் மொட்டை தலையும் தமிழ் ஆடியன்சுக்கு பிடித்து விட்டதால், பல படங்களில் வில்லனாக நடித்தார்.
அதன்பின் கடலோரக் கவிதைகள் படத்தில் ஹீரோவாக மாறினார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. கொங்குத் தமிழ் பேசி, தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சத்யராஜின் “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறயே, என்ன மா… கண்ணு, தகடு தகடு” என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்.
சத்யராஜ் தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது, பெரியார் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது என எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளார். பாகுபலி திரைப்படத்தில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் உலகம் முழுவதும் இவரை கொண்டு சேர்த்தது.
இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் சத்யராஜூக்கு அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம், சத்யராஜூக்கு சென்னையில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் அவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடியாகும்.
மேலும், fortuner, ford endeavour, innova என மூன்று கார்களை வைத்து இருக்கிறார். இந்த கார்களின் மதிப்பு ரூ.72 லட்சம் மேலும், இவர் சொந்தமாக நாகம்மாள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார்.
இதன் மூலமாகவும் இவருக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 60 கோடியில் இருந்து 70 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.