பிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்

பிரபல திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல், உடல்நலக்குறைவால் காலமானார்.
திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட ஷியாம் பெனகல் 1934 டிசம்பர் 14-ல் பிறந்தார்.
இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவர் இயக்கிய ‘அங்கூர்’ படம் அமைந்தது. 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் தயாரித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதியன்று தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியதாக கூறப்படுகிறது.
வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்னைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை (டிச.23) காலமானார்.
(Visited 19 times, 1 visits today)