வியாழன் கோளில் ஏற்படும் நிற மாற்றங்கள் : ஒரு அடடே தகவல்!
சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன. வியாழன் கிரகத்தில் நிறங்கள் அடிக்கடி மாறி வருகின்றன. இவ்வாறு அடிக்கடி நிறங்கள் மாறுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் (University of Leeds) சேர்ந்த வானியலாளர்கள் கூறும்போது, வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் கீழே நிகழ்கிறது. ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் நிறங்கள் மாறுகின்றன. கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் பூமத்திய ரேகையைச் சுற்றி அட்சரேகைக் கோடுகளுடன் காணப்படுகின்றன. இந்த பெல்ட்களின் நிறங்கள் தோராயமாக மாறுகின்றன என்றும் வண்ண மாற்றங்கள் கிரகத்தின் வானிலை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.