இலங்கை செய்தி

“மொட்டு கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“எதிரணிக்குரிய பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மால் முடிந்தளவு நிறைவேற்றிவருகின்றது.

இலங்கையில் இந்த ஆட்சியின்கீழ் ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டுவருகின்றன. அடக்குமுறை கையாளப்படுகின்றது. இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.

இந்த அரசாங்கத்தை தேர்தல்மூலம் தோற்கடிப்பது எமக்கு சவாலான விடயமாக அமையாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் நிறுத்தப்படும் வேட்பாளரே இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி.” – என சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!