இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் ரூபாவின் பெறுமதியானது எதிர்காலத்தில் நிலையற்றதாக காணப்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வரவேண்டிய வெளிநாட்டு வருமானங்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பார்க்கும்போது, நாணய மாற்று வீதம் கீழிறங்கும் என்று நான் பார்க்கவில்லை” என்று ஆளுநர் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நிலைமாற்றம் இருந்தாலும், எங்கள் கொள்கை சந்தை செயல்பட அனுமதிக்கும், மற்றும் அதிக ஏற்ற இறக்கம் இருந்தால் தலையிடும் திறனும் எங்களிடம் உள்ளது.
மத்திய வங்கி இப்போது 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்டுள்ளது, ஆனால் தேவைகளின் அடிப்படையில் விகிதங்களை தீர்மானிக்க மத்திய வங்கி சந்தையை அனுமதிக்கிறது, என்றார்.
(Visited 2 times, 1 visits today)