அரசியல் இலங்கை செய்தி

‘தமிழர் பிரச்சினை’ – மனோ, அநுர நேரடி சந்திப்பு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் Mano Ganesan ஆகியோருக்கு இடையில் இன்று (17) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

“ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ கணேசன், நேற்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, பகிரங்கமாக கூறி இருந்தார்.

இதையடுத்தே இன்று இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதற்கமைய அடுத்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணி TPA தூதுக்குழுவை, சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!