இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம்!

  • February 2, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்துக்கு Kivul Oya project எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் Vavuniya – Nedunkerni இன்று (02) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை நேரப்படி முற்பகல் 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு மக்களுக்கு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை செல்லவுள்ளனர். போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்ட திகதியில் மாற்றம்!

  • January 28, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தின் திகதி மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் முன்னெடுக்கப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டம், பெப்ரவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கின் பொது அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!