இலங்கை

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • October 13, 2025
  • 0 Comments

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக  சருமத்தில் சிவத்தல், வியர்வை கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தோல் மருத்துவர் இந்திரா கஹாவிட்ட  (Indira Kahavita) வலியுறுத்தியுள்ளார். டைனியா வெர்சிகலரால் (Tinea versicolor) பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் கணிசமான அளவில் இருப்பதாக […]

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலை – சுகாதாரப் பிரிவினர் விடுத்த எச்சரிக்கை

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெங்கு நோய் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாட்டில் 39,401 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டெங்குவால் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என நிபுணர் தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 431 […]

உலகம்

உலகளவில் இ-சிகரெட் பயன்படுத்தும் 10 கோடி பேர்! சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் 10 கோடி பேர் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களில் 1.5 கோடிக்கு மேற்பட்டோர் சிறுவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இ-சிகரெட்டுகள், நிகோடின் கலந்த திரவங்களை ஆவியாக மாற்றி புகையாக விடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இதில் புரொப்பிலின் கிளைகால், கிளிசரின், கன உலோகங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் உள்ளன. இந்தவகை பொருட்கள் உடலுக்குத் […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை – வட்ஸ்அப்பில் வரும் ஆபத்து

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம், மூலம் நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள், பயனர் பெயர் மற்றும் QR குறியீடுகளைக் கொடுத்து மோசடிக்குள் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. பின்னர் இணைய வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பது போன்ற மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் […]