துப்பாக்கிகளை மீளப்பெறுகிறது ஆஸ்திரேலியா! தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!
துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டத்தை ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று (19) இந்த தகவலை வெளியிட்டார். சிட்னி, போண்டியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூத சமூகம் உட்பட நாட்டில் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கமைய துப்பாக்கிச்சட்டங்களும் கடுமையாக்கப்படவுள்ளன. இதற்குரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேசிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன. இதன்ஓர் அங்கமாகவே […]




