இலங்கை

ஜா-எலயில் துப்பாக்கிச் சூடு

  • March 7, 2026
  • 0 Comments

ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவருடைய மனைவியின் இல்லம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த சந்தேக நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர […]

இலங்கை

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

  • February 21, 2026
  • 0 Comments

மாத்தறை, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

சிறிதரன் எம்.பியை கைது செய்யவேண்டாமென அரச உயர்மட்டத்திலிருந்து உத்தரவு?

  • December 23, 2025
  • 0 Comments

“யாழ் தையிட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் (sivagnanam shritharan) கைது செய்யப்படதாது ஏன்?” அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது இது தொடர்பில் இன்று (23) கேள்வி எழுப்பட்டது. குறித்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் (Department Of Government Information) நடைபெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்பான அறிவிப்பை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்ட பின்னர், கேள்வி நேரம் ஆரம்பமானது. இதன்போது தையிட்டியில் நடந்த போராட்டம் தொடர்பிலும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னியில் ஏழு பேர் கைது! போண்டி தாக்குதலுடன் தொடர்பா?

  • December 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னி தென்மேற்கில் நேற்று நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரிடம் ஆஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தியுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். சிட்னி, போண்டி பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன. அந்தவகையில் சிட்னி, லிவர்பூல் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது குழுவொன்றை சேர்ந்த எழுவர் நியூ […]

இலங்கை

ஹெரோயினுடன் சிக்கிய அதிபரிடம் பலகோணங்களில் விசாரணை! 

  • November 6, 2025
  • 0 Comments

ஹெரொயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அரச பாடசாலையொன்றின் அதிபருக்கு, டுபாயில் இருந்தே குறித்த போதைப்பொருள் அனுப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த அதிபருக்கு சொந்தமான எப்பாவல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் மனைவி, தேசிய […]

இலங்கை

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலி

  • November 6, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மேற்படி காலப்பகுதிக்குள் நீரில் மூழ்கியவர்களில் 195 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 135 உள்நாட்டு பிரஜைகளும், 30 வெளிநாட்டு பிரஜைகளுமே இவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன. சிலாபம், தெதுரு ஓயாவிற்கு நீராடச்சென்றவர்களில் ஐவர் நேற்று நீரில் மூழ்கி பலியானார்கள். […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை – வட்ஸ்அப்பில் வரும் ஆபத்து

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம், மூலம் நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள், பயனர் பெயர் மற்றும் QR குறியீடுகளைக் கொடுத்து மோசடிக்குள் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. பின்னர் இணைய வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பது போன்ற மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரங்களை வழங்க தீர்மானம்!

  • October 5, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் போராட்டங்களை நடத்துவதற்கான நிபந்தனைகளை விதிக்க காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படாது, மாறாக அதனை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை உருவாக்க அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மென்செஸ்டரில் யூத ஆலயம் ஒன்றில் நடந்த கத்தி குத்து தாக்குதல் மற்றும் கார் ஒன்று கூட்டத்தினர் இடையே புகுந்த சம்பவங்களைத் தொடர்ந்து  சனிக்கிழமை […]

error: Content is protected !!