இலங்கையில் பொருளாதார நெருக்கடி: மீண்டும் வரிசை யுகம்! அரசு மறுப்பு!
“பேரிடர் நிலையால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற அச்சமூட்டும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வரிசை யுகம் ஏற்படாது, இலங்கை நிச்சயம் சிறப்பாக மீண்டெழும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். “பேரிடரால் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் நெருக்கடி நிலை ஏற்படும், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இப்படியான அச்சமூட்டும் தகவல்கள் போலியானவை. அதனை எவரும் […]




