என்.பி.பி. ஆட்சிமீது சர்வதேசம் நம்பிக்கை: தொடரும் உதவி!
“ஊழல், மோசடி அற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது அனைத்துலக சமூகத்துக்கு நம்பிக்கை இருப்பதால், இலங்கை மீண்டெழுவதற்கு நிச்சயம் வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்.” இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மீட்பு பணி, மருத்து சேவை, விநியோகம் என சகல வழிகளிலும் உதவிகள் கிடைக்கப்பெற்றன. அடுத்தக்கட்டமாக மீள் கட்டுமான பணிகளை செய்ய […]




