மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய வேலைத்திட்டம்!
மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் சம்பந்தமாக மலையக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய தேசிய வேலைத்திட்டத்துடன் கூடிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் எம்.பி. , “சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், […]





