இலங்கை செய்தி

கால அவகாரம் கோரினார் ஷிராந்தி!

  • January 27, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச Shiranthi Rajapaksa , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் FCID முன்னிலையாவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” Siriliya எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச இன்று FCID க்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் இன்று முன்னிலையாக முடியாது என […]

இலங்கை செய்தி

ஷிராந்தி ராஜபக்சவுக்கு FCID அழைப்பு!

  • January 27, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, Shiranthi Rajapaksa பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு FCID இன்று (27) அழைக்கப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில் அவர் FCID  இல் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

தாய்லாந்து ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவு!

  • January 14, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் Thailand வடகிழக்கு பகுதியில் ரயில்மீது கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட பாரிய கிரேன் crane விழுந்ததில் குறைந்தபட்சம் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைக்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாங்காக்கிலிருந்து Bangkok 230 கிலோமீற்றல் தொலைவில் உள்ள, சீகியோ மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி இன்று புதன்கிழமை காலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன், ஓடும் ரயில்மீது விழுந்துள்ளது. இதனையடுத்து ரயில் தடம் […]

இலங்கை செய்தி

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் பலி: மலையகத்தில் தொடரும் சோகம்!

  • January 12, 2026
  • 0 Comments

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். நுவரெலியா மாவட்டம் Nuwara Eliya , நானுஓயா Nanu Oya கிரிமிட்டி பகுதியிலேயே இன்று (12) இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கூட்டை கழுகு தாக்கிய நிலையில், கலைந்து வந்த குளவிகள் குறித்த பெண்ணை தாக்கியுள்ளன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 78 வயதான நடராஜா லெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தியா தமிழ்நாடு

சி.ஐ.பி. விசாரணைக்காக டெல்லி பறந்தார் விஜய்!

  • January 12, 2026
  • 0 Comments

சி.ஐ.பி. CIB விசாரணையை எதிர்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம்மூலம் டொல்லி நோக்கி பயணமானார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார். டெல்லி […]

ஆஸ்திரேலியா

மெல்பேர்னில் முஸ்லிம் சமூகத் தலைவருக்கு மிரட்டல்: விசாரணை தீவிரம்!

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் தென்கிழக்கு பகுதியில் இஸ்லாமிய சமூகத் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இச்சம்;;பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத் தலைவரும், அவரது மனைவியும் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவொன்று அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. வாகனத்தை வழிமறித்து கீழ் இறக்கி, முஸ்லிம் விரோத சொற்பிரயோகங்கள் செய்யப்பட்டன என்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர். தமது காரை அந்த […]

இந்தியா

நாளை சி.ஐ.பியில் முன்னிலையாகிறார் விஜய்!

  • January 11, 2026
  • 0 Comments

கரூர் பெருந்துயர் சம்பவம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Vijay, பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அவர் நாளை டெல்லி செல்கின்றார். சி.பி.ஐ. CBI விசாரணைக்காக நாளை (12) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் விஜய் பயணமாகின்றார். முற்பகல் 11 மணியளவில் சி.ஐ.பி. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார் என தெரியவருகின்றது. அத்துடன், டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூரில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை!

  • January 8, 2026
  • 0 Comments

“ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. நீதியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake சபையில் இன்று (08)கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். “ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் […]

இலங்கை செய்தி

சாரா ஜஸ்மின் எங்கே?

  • January 7, 2026
  • 0 Comments

புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எமக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டாலும் அதனை நம்ப முடியாது. அவர் தப்பி சென்றிருக்கக்கூடும். அவர் இந்தியாவில் இருக்கின்றார் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறி இருந்தனர். பாதாள குழு […]

இலங்கை செய்தி

வீட்டை கொளுத்திய தந்தை: 13 வயது மகள் பலி! மேலும் நால்வருக்கு எரிகாயம்!

  • January 6, 2026
  • 0 Comments

update வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். ……………. முதலாம் இணைப்பு வீட்டை கொளுத்திய நபரும், அவரது 13 வயது மகளும் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் நபரின் மனைவி , மாமியார், மகன், மகள் ஆகியோரும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது மூன்று பிள்ளைகளுடன் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை  […]

error: Content is protected !!