அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்புக்கு சஜித் ஆதரவு: காலாசாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்து!

  • January 3, 2026
  • 0 Comments

“கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற விடயங்கள் புகுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவால் C.W.W. Kannangar இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றைய காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

76 வருடகால சாபம்: என்.பி.பி. ஆட்சி வழங்கிய பரிகாரம் என்ன?

  • January 3, 2026
  • 0 Comments

” ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe நாடாளுமன்றத்தில் இருப்பது நாட்டுக்கு நல்லது.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்து, 76 வருடகால சாபம் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். எனினும், என்.பி.பி. ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்ன? 76 வருடகால “சிஸ்டம்” முறையற்றது என விமர்சித்தவர்கள், […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு ஆபத்தெனில் ரணில் களத்துக்கு வருவார்: ஐதேக அறிவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

“நாடு விழும்பட்சத்தில் சவாலை ஏற்று அதனை நிர்வகிகக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எனவே, நாட்டுக்கு ஆபத்தெனில் அவர் பொறுப்பைவிட்டு ஓடும் நபர் கிடையாது.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, எதிரணி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகூறி ஆசிபெற்றனர். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சமன் ரத்ன பிரிய கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை எனவும், இவ்வாறு […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித்மீது சரமாரியாக விமர்சனக்கணைகள் தொடுக்கும் ரணிலின் சகா: சங்கமம் தடைபடுமா?

  • January 2, 2026
  • 0 Comments

“ இருப்பதற்கு பிடிக்கவில்லை என்பதால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினேன். எனவே, மீண்டும் அங்கு செல்வதற்குரிய திட்டம் எனக்கு இல்லை.” இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும Ajith Manapperuma தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி UNP ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த அஜித் மானப்பெரும, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் SJP இணைந்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டுக்குரிய அரசியல் சமர் 5 ஆம் திகதி ஆரம்பம்!

  • January 2, 2026
  • 0 Comments

பிரதான அரசியல் கட்சிகள் 2026 ஆம் அண்டுக்கான தமது முதலாவது விசேட கூட்டங்களை எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் 6 ஆம் திகதி கூடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமும் 5 அல்லது 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இது […]

அரசியல் இலங்கை செய்தி

ரணிலிடமிருந்து சஜித்துக்கு பறந்த அழைப்பு: அரசியல் களத்தில் நடக்க போவது என்ன?

  • January 2, 2026
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் Sajith Premadasa முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாசவை, நேற்று (01) தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், அரசியல் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர் என தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை சஜித் பிரேமதாச உருவாக்கியதில் இருந்து அவருக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

தாய் வீடு திரும்புகிறார் சஜித்: சாவிக் கொத்தை கையளிப்பாரா ரணில்?

  • January 1, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. தெரிவித்தார். கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஒரு குடையின்கீழ் இருந்த கட்சிதான் தற்போது இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன. எனவே, மீள் இணைவு என்பது கடினமாக இருக்காது. இரு கட்சிகளின் கொள்கைகளும் […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித் தலைவர்: ரணில் ஆலோசகர்! புதிய யோசனை முன்வைப்பு!!

  • December 31, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி SJP மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி UNP என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando இன்று (31) தெரிவித்தார். சஜித் பிரேமதாசவின் Sajith Premadasa தலைமையின்கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் Ranil Wickremesinghe ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று (30) சந்திப்பு நடைபெற்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

காலி மாநகர சபைக்குள் அடாவடி: ஐந்து அரசியல் வாதிகள் கைது!

  • December 31, 2025
  • 0 Comments

காலி மாநகரசபை அமர்வின்போது அடாவடியில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எதிரணி உறுப்பினர்கள் ஐவர், பொலிஸாரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சபைக்குள் குழப்பம் விளைவித்து, மாநகர சபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள்மீது தண்ணீர் வீசி தாக்குதல் நடத்தி அநாகரீகமாக நடந்துகொண்ட ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இவர்களை சட்ட நடவடிக்கையின் நிமித்தம் காலி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 31, 2025
  • 0 Comments

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் […]

error: Content is protected !!