வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக பகிர்ந்தளிக்க தீவிர கண்காணிப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுவரும் நிவாரணப் பொருட்களை முறையாக பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் (NDRSC) இயக்கப்படும் ஒருகொடவத்தை களஞ்சியசாலை வளாகத்திற்கு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிவாரண உதவிகளின் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களின் விநியோக ஏற்பாடுகள் […]





