சிரிய நாட்டு ஜனாதிபதியின் கார் சேகரிப்புகள் – மிரள வைக்கும் பட்டியல்
சிரிய நாட்டு ஜனாதிபதி பஷார் அல்-அசாதுக்கு சொந்தமானவை என நம்பப்படும் சொகுசுக் கார்களைக் காட்டும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
டமாஸ்கஸ் நகரில் அசாதின் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு கிடங்கில் அந்தக் கார்கள் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
காணொளியில் 40க்கும் அதிகமான சொகுசுக் கார்கள் தெரிகின்றன.
சிவப்பு நிறத்தில் Ferrari F50, Lamborghini, Rolls Royce உள்ளிட்ட பல கார்கள் கிடங்கில் உள்ளதாக கூறப்படுகின்றது.
கிளர்ச்சியாளர்கள் அசாதின் ஆட்சியைக் கவிழ்த்துள்ளனர். அவரும் அவரது குடும்பத்தாரும் ரஷ்யாவிற்குத் தப்பிவிட்டனர்.
அங்கு அவர்களுக்கு அரசியல் ரீதியான அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.





