பசுபிக் தீவு நாடுகளின் ஆதரவு: ஆஸ்திரேலியாவிற்கு காலநிலை மாநாடு நடத்தும் வாய்ப்பு?
ஐ.நா. காலநிலை மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு நாடுகளும் ஐ.நாவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.
இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு விட்டுக்கொடுக்க மறுக்கும் பட்சத்தில் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு ஜேர்மனி கைகளுக்குள் சென்றுவிடும்.
இந்நிலையில் இது விடயத்தில் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் துருக்கி ஜனாதிபதிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடிதம் எழுதியுள்ளார்.
18 நாடுகளைக் கொண்ட பசிபிக் தீவு மண்டல நாடுகளின் கூட்டமைப்பானது, மாநாட்டை நடத்தும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 7 visits today)





