பொழுதுபோக்கு

“இரண்டாம் தாரம்” இப்ப டிரன்டாகிப் போசே்சோ? இவங்களுக்கு என்ன குறை?

நடிகை சுனைனா சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், இவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ள பிரபலம் யார் என்பது பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

தற்போது 35 வயதாகும் சுனைனாவுக்கு, பட வாய்ப்புகளும் வருவது குறைந்து விட்ட நிலையில்… திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்துள்ளார். அதன் படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதை.. கையில் ரிங் அணிந்திருந்த புகைப்படம் வெளியிட்டு தெரியப்படுத்தினார்.

ஆனால் இவர் யாரை காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்கிற எந்த தகவலும் வெளியாகவில்லை.

சுனைனா காதலித்து கரம்பிடிக்க உள்ளவர் ஒரு பிரபலம் தான். ஆனால் அவர் சினிமா பிரபலம் இல்லை. யூடியூப் பிரபலம். துபாய் யூடியூபரான காலித் அல் அமெரி என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யூடியூப் காலித் அல் அமெரி, சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக வெளியிட்டது போன்ற அதே புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த தகவலை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் காலித் தெரிவித்தார். சுனைனா போலவே காலித் அல் அமெரியும் தான் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் யார் என்பதை தெரிவிக்கவில்லை.

40 வயதான காலித் அல் அமெரிக்கு ஏற்கனவே சலாமா என்பவருடன் திருமணம் ஆன நிலையில்… 14 வருடத்திற்கு பின்னர் சமீபத்தில் தான் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்ததாக அறிவித்தனர்.

சுனைனா இரண்டாவது மனைவியாக உள்ளது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ராதிகா சரத்குமாரின் மகளுடைய திருமண ஏற்பாடுகள் தற்போது மும்முறமாக நடைபெற்று வருகின்றது.

இதில் வரலட்சுமி திருமணம் முடிக்கப்போகும் நபரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், அவருக்கு 13 வயதில் மகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content