வாழ்வியல்

பல் ஈறு வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான பதிவு

பல்ஈறுகள் வலு விழுந்து விட்டாலோ அல்லது கிருமிகள் புகுந்து விட்டாலோ பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அதிக வலியை ஏற்படுத்தும். இது வாய் மட்டுமல்லாமல் காதுவரை அந்த வலி ஏற்படும் பெரும்பாலும் இந்த ஈறு வலி குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இவற்றை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த ஈறு பிரச்சனை இருக்கும்போது கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிக எளிமையான சாப்டான உணவுகள், விட்டமின் சி சத்து நிறைந்த பழ சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். விட்டமின் டி அதிகம் நிறைந்துள்ள பால் எடுத்துக் கொள்ளலாம்.

வெறும் பிரஸ் மட்டுமே வைத்து வீக்கம் உள்ள இடத்தில் மெதுவாக அழுத்தி விடவும் இதனால் அதிலுள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படும் ,அந்த கெட்ட நீர் வெளியேறிவிட்டால் வலி குறைந்து விடும்.

கல் உப்பு

காலையில் நீங்கள் பயன்படுத்தும் பர்பசையுடன் சிறிது உப்பு கற்களையும் சேர்த்து பல் துலக்கவும் இந்தக் கல் உப்பு பல்லின் வேர் பகுதி வரை சென்று கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது.

சூடான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம் அது போல் ஐஸ் கட்டியை துணியில் சுற்றி வீக்கம் இருக்கும் பகுதிகளில் வைக்கவும் இதனால் வலி குறையும்.

மஞ்சள்

மஞ்சளை நீருடன் பேஸ்ட் பதத்தில் கலந்து ஈறு வலி உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும், பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து விட வேண்டும் இதை இரு முறை செய்ய வேண்டும்.

கற்றாழை

சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை கழுவி விட்டு வலி உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து ஐந்து நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து விட வேண்டும் இது ரத்த கசிவை நிறுத்தும்.

பற்களில் விட்டமின் டி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துக்கள் குறைவினால் முதலில் பாதிக்கப்படுவது பற்களும் ஈறுகளும் தான்.

நம் ஈறுகள் எந்த அளவிற்கு சுகாதாரமாக உள்ளதோ அதுவே பற்களின் ஆரோக்கியத்தை வழி வகிக்கிறது ஈறுகளில் சரியான பராமரிப்பு கொடுத்தாலே பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

(Visited 32 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான