ஜெனிவா பல்கலைக்கழக கட்டிடத்தினை ஆக்கிரமித்த மாணவர்கள் : சுவிஸ் போலீசார் அதிரடி நடவடிக்கை

ஜெனிவா பல்கலைக்கழக கட்டிடத்தில் ஏறக்குறைய ஒரு வாரமாக அக்கிரமி’த்திருந்த சுமார் 50 பாலஸ்தீன ஆதரவு மாணவர் போராட்டக்காரர்களை சுவிஸ் போலீசார் அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுமார் 20 அதிகாரிகள் யூனிமெயில் கட்டிடத்திற்குள் நுழைந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கைவிலங்கிடப்பட்டு வேன்களில் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக வளாகங்கள், இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கும் நிறுவனங்களில் இருந்து கல்வி நிறுவனங்கள் விலகக் கோரி வரும் பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையைக் காட்டும் மாணவர்களின் பெருகிவரும் போராட்டங்களின் மேடையாக உள்ளது .
அமெரிக்காவில் உள்ள கல்லூரி வளாகங்களில் முதன்முதலில் பரவிய போராட்டங்கள், இங்கிலாந்து, ஐரோப்பாவின் பிற பகுதிகள் , லெபனான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை எட்டியுள்ளன.