பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் நோய்த்தொற்று : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில் கக்குவான் இருமல் தீவிரமான வெடிப்புக்கு தயாராகி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன்காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூன்று வாரங்களுக்கு தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ஹெச்எஸ் மருத்துவர்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் தனிமைப்படுத்தப்படும் போது முகமூடிகளை அணியுமாறு வலியுறுத்துகின்றனர்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2,793 பேர் குறித்த இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் உள்ள வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் மருத்துவ மையம் அம்மை மற்றும் வூப்பிங் இருமல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறிகுறிகளைக் காட்டும் எவரும் மருத்துவரை அணுவ முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)